திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்


திருப்பத்தூர் அருகே  டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 10:52 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வி.வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மலம்பட்டியில்

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வி.வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மலம்பட்டியில் திருப்பத்தூர்–பொன்னமராவதி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் மலம்பட்டி, குருவாடிப்பட்டி, கணக்கண்பட்டி, அம்மாயேந்தல், கருப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதியை பெண்கள் கடையை அகற்றக் கோரி கடந்த மாதம் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். ஆனால் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் மலம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மலம்பட்டி, குருவாடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு சமையல் செய்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story