சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் சாவு மற்றொருவர் படுகாயம்


சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் சாவு மற்றொருவர் படுகாயம்
x

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை, 70 வயது மதிக்கத்தக்க முதியவர்

சூளகிரி,

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும், மற்றொரு நபரும் சென்றனர். கோபசந்திரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற மற்றொரு நபர் பலத்த காயம் அடைந்து, சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இறந்து போன முதியவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் என்ற தகவல் தெரியவந்தது, மேலும் அவரது பெயர், விவரம் மற்றும் உடன் வந்தவர் பற்றிய விவரம் உடனடியாக கிடைக்கவில்லை.

இந்த விபத்து தொடர்பாக, லாரி டிரைவர் நாகிரெட்டி என்பவரை சூளகிரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவர் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் ஆவார்.

Next Story