சிதம்பரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2017 11:38 PM IST (Updated: 16 May 2017 11:38 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கலியமூர்த்தி, பன்னீர்செல்வம், மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். வருவாய் துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story