தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நாமம் போட்டு சார்பில் தொழிலாளர்கள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்டசெயலாளர் நாகராஜ், ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர்கள் சங்க நிர்வாகி செல்வம், போராட்டக்குழு நிர்வாகிகள் அன்புமணி, கனகராஜ், மாது உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஓய்வூதிய பலன்கள்
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.7 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு விரைவில் வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதியை அளிக்க வேண்டும். ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும், ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் லஞ்சம்,ஊழல் ஆகியவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி, போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீர்படுத்தி லாபத்தை அதிகரிக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story