ஆர்.டி.ஓ.வை தகாத வார்த்தையால் பேசிய வக்கீல் மீது வழக்கு


ஆர்.டி.ஓ.வை தகாத வார்த்தையால் பேசிய வக்கீல் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 May 2017 3:00 AM IST (Updated: 17 May 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வை தகாத வார்த்தையால் பேசிய வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று முன் தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் இருளர் இன மக்கள் 30 பேருக்கு சாதிச்சான்றுகளையும், தமிழக முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதி 6 பேருக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.

வக்கீல் மீது வழக்கு

அப்போது அங்கு வெங்கடேசன் என்பவர் தனது மகள் தீபா என்கின்ற திவ்யாவிற்கு பிறப்பு சான்றிதழ் வேண்டி மனு செய்ய வந்திருந்தார். அவருடன் புதுச்சேரியில் வக்கீலாக உள்ள சதீஷ் என்பவர் வந்திருந்தார். அவர்களை பார்த்த ஆர்.டி.ஓ. நீங்கள் யார் என்று கேட்டபோது அங்கிருந்த வக்கீல் சதீஷ் ஆர்.டி.ஓ.வை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story