ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 17 May 2017 3:45 AM IST (Updated: 17 May 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் விக்டர் செல்வதுரை (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவியும், ரோஷினி (6) என்ற மகளும் உள்ளனர்.

பட்டாபிராமில் இருந்து சென்டிரல் செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் நேற்று முன்தினம் இரவு விக்டர் செல்வதுரை சென்று கொண்டிருந்தார். இந்து கல்லூரி, ஆவடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் இருந்து அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த விக்டர் செல்வதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்டர் செல்வதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story