சக்கரக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை
சக்கரக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அந்த கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் நகரில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைப்பதற்கு அப்பகுதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கடையால் அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் மதுபாட்டில்கள் வழியெங்கும் கிடப்பதால் ஒருவித அச்சம் ஏற்படுவதாகவும் அப்துல்கலாம் நகர், சக்கரக்கோட்டை, மஞ்சனமாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கடை அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
முற்றுகை
இதையடுத்து உடனடியாக டாஸ்மாக்கடையை அகற்ற வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை டாஸ்மாக்கடை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும், எனவே டாஸ்மாக்கடை அகற்றப்படும் வரை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story