மாற்று டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை அரசு ஏற்பாடு


மாற்று டிரைவர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 17 May 2017 12:46 AM IST (Updated: 17 May 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஏற்பாட்டின் பேரில் 150 மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் பஸ்போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் மாலை நேரத்திற்கு பின்னர் நிலைமை மோசமாக இருந்தது. இந்தநிலையில் அரசு மேற்கொண்ட மாற்று நடவடிக்கையின் பயனாக அனைத்து பகுதிகளிலும் தற்காலிக (மாற்று) டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜனுடன் இணைந்து புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அனுபவம் வாய்ந்தவர்கள்

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:- போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு வேலை கேட்டு வந்திருந்த ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனுபவம் வாய்ந்த இளைஞர்கள், ஓய்வு பெற்ற டிரைவர்கள், பள்ளி-கல்லூரி வாகன டிரைவர்கள் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு அவர்களின் ஓட்டும் திறனை பரிசோதித்து பஸ்களை இயக்க அனுமதித்தனர்.

பஸ்கட்டண உயர்வு

இந்த போராட்டம் தொடர்ந்து எத்தனை நாட்கள் நடந்தாலும், அதை முறியடிக்கும் விதமாக மாற்று ஏற்பாடு செய்து, அனைத்து பஸ்களையும் ஓட வைத்து வெற்றி பெறுவோம். இந்தநிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசை கண்டித்தும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story