இரவு, பகலாக காத்திருந்து காவிரி கூட்டுக் குடிநீர் கசிவு தண்ணீரை பிடித்து செல்லும் பெண்கள்
சாயல்குடி அருகே சண்முககுமாரபுரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரை பெண்கள் இரவு, பகலாக காத்திருந்து சேகரித்து எடுத்து செல்கின்றனர்.
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட சண்முககுமாரபுரத்தில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சாயல்குடி பேரூராட்சி மூலம் காவிரிக் கூட்டுக் குடிநீர்த்திட்டம், நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மற்றும் ஐந்து ஏக்கர் ஆழ்துளை கிணறு மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாலும், காவிரிக் கூட்டுக் குடிநீர்த்திட்டக் குழாய்களை பல பகுதிகளில் சேதப்படுத்தி நீர் சேகரித்து வருவதாலும், நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மேலும் ஐந்து ஏக்கர் ஆழ்துளை கிணறு மூலமும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி பெண்கள் காவிரிக்கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரை இரவு பகலாக காத்திருந்து சேகரித்துச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி, வினிதா உள்ளிட்ட கிராம மக்கள் கூறியதாவது:- ஒரு குடம் குடிநீர் ரூ.7க்கு விற்கின்றனர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரியும் எங்களால் குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, ஆடு-மாடுகளுக்கு என விலைக்கு தண்ணீர் வாங்குவது என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.105க்கும் மேல் தேவைப்படுகிறது. இது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதிகரிக்கும்.
நடவடிக்கை
விவசாயம் பொய்த்த நிலையில், விவசாயத் தொழிலும் இல்லாத நிலையில் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. அதில் தண்ணீருக்காக பணம் செலவழிப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரை காத்திருந்து சேகரித்து எடுத்து செல்கின்றோம்.
இரவு நேரங்களில் குழாயிலிருந்து கசியும் நீர் அருகில் தேங்கி ஆடு-மாடுகளுக்கு குடிநீராகப் பயன்படுகிறது. மேலும் இவ்வாறு பிடிக்கும் தண்ணீர் சுகாதாரமற்றதாக உள்ளது. இதை குடித்த இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் எங்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story