புதுவையை வறட்சி பிரதேசமாக அறிவிக்க கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது


புதுவையை வறட்சி பிரதேசமாக அறிவிக்க கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 17 May 2017 3:15 AM IST (Updated: 17 May 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை வறட்சி பிரதேசமாக அறிவிக்க கோரி சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்த விவசாயிகள் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவையை வறட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் விவசாய கடன் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சார திட்டத்தை நிபந்தனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை பழைய பஸ்நிலையம் அருகே கூடினர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் மாசிலாமணி, தலைவர் ரவி, பொதுச்செயலாளர் கீதநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலத்தில் துணை பொதுச்செயலாளர் ராஜா, கலியமூர்த்தி, புண்ணியகோடி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டசபையை நோக்கி சென்றது.

51 பேர் கைது


மி‌ஷன்வீதி சந்திப்பு அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி சட்டசபையை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story