புதுச்சேரி பிரதேச பிரெஞ்சிந்திய விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் சாலை மறியல்
புதுவையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய புதுச்சேரி பிரதேச பிரெஞ்சிந்திய விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
இந்தியாவோடு புதுவை இணைந்தபோது பிரெஞ்சு குடியுரிமையை இழந்த தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். புதுவை கவர்னர் கிரண்பெடி பற்றி அவதூறு பரப்பும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கம் சார்பில் நேற்று காலை புதுவை–கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு இயக்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
40 பேர் கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டம் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story