மராட்டியத்தில் நெடுஞ்சாலையோரங்களில் நவீன பொது கழிவறைகள்
மராட்டியத்தில் நெடுஞ்சாலையோரங்களில் நவீன பொது கழிவறைகள் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
மாநிலத்தில் நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செய்பவர்கள், ஆங்காங்கே கழிவறை வசதிகள் இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால், சமயங்களில் திறந்தவெளியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சூழல் உருவாகிறது.
இதனை கருத்தில் கொண்டு, மராட்டியத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் மும்பையில் உள்ள முக்கிய சாலையோரங்களில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் நவீன பொது கழிவறைகள் கட்டப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து இருக்கிறார்.
அதன்படி மாநில நெடுஞ்சாலையோரங்களில் எண்ணெய் நிறுவனங்களின் பங்களிப்புடன் பொதுப்பணித்துறை நவீன பொது கழிவறைகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
25 கி.மீ., தூர இடைவெளியில்...
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில நெடுஞ்சாலையோரங்களில் சராசரியாக 25 கி.மீ., தூர இடைவெளியில் 37 நவீன பொது கழிவறைகளை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இந்த கழிவறைகள் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளின் அருகாமையில் கட்டப்படும். அவர்கள் கழிவறைகளை பராமரிப்பார்கள்’’ என்றார்.
மேலும், மந்திரி சபை ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான ஒப்பந்தம் எண்ணெய் நிறுவனங்களுக்கு விடப்படும் என்று கூறிய அவர், கழிவறைகள் கட்டும் பணி மழைக்காலத்திற்கு பின்னரே தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

Related Tags :
Next Story