மராட்டியத்தில், குரங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலி


மராட்டியத்தில், குரங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2017 1:14 AM IST (Updated: 17 May 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் குரங்கு காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் குரங்கு காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கத்திற்கு சிந்துதுர்க் மாவட்டத்தை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டனர். பலர் இந்த நோயால் உயிரிழந்தனர்.

இதுபற்றி சிந்துதுர்க் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் யோகேஷ் காலே கூறியதாவது:–

நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலும் குரங்கு காய்ச்சல் பரவும் தன்மை தீவிரமாக இருக்கும். மழைக்காலத்தில் இருக்காது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் இந்த நோய் மராட்டியத்தில் கண்டறியப்பட்டது. அப்போது 128 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தார்கள்.

11 பேர் பலி

இந்த ஆண்டு 187 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் இறந்து உள்ளனர். வனப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 842 பேருக்கு இந்த காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன.

நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்து கிடக்கும் குரங்குகளின் உடலில் இருந்து வெளிப்படும் வைரஸ் மூலம் இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சிந்துதுர்க் வனப்பகுதிகளில் 40 குரங்குகள் இறந்து கிடந்ததை கண்டுபிடித்து தீயிட்டு எரித்தோம். இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குரங்கின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story