குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம்: கல்குவாரி தண்ணீர், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா?
குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம்: கல்குவாரி தண்ணீர், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? அடுத்த மாத தொடக்கத்தில் வினியோகம்
சென்னை,
கல்குவாரிகளில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட உள்ள தண்ணீர், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அங்கு இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
கல்குவாரி தண்ணீர்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும், அடுத்து வரும் மாதங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் நீரை சுத்திகரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தம் ரூ.13.6 கோடி செலவில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பயன்படுத்த முடியுமா?
கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் நீரை பயன்படுத்த முடியுமா? அது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த குமுதா என்ற பெண் கூறும்போது, ‘கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் நீர் மழைநீர் தான். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால், முந்தைய ஆண்டு பெய்த மழையில் தேங்கிய நீர்தான் கல்குவாரியில் இருக்க வேண்டும். அந்த நீர் ஏற்கனவே மாசடைந்து இருப்பது போல் தான் தெரிகிறது. இதை எப்படி குடிநீருக்கு பயன்படுத்த முடியும்? அது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்றார்.
இதேபோல் முகப்பேரை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் என்பவரும் “தண்ணீர் இல்லாத கஷ்டத்துக்கு இந்த முயற்சி நல்லது தான். ஆனால் இந்த நீர் பயன்படுத்த ஏதுவானது தானா? என்று ஒரு முறைக்கு, பல முறை சோதனை செய்து பார்த்து கொள்வது நல்லது. இந்த திட்டத்துக்கு ஒதுக்கிய பணத்தை நீர்நிலைகளை தூர்வாருவதற்கு பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றார்.
குடிப்பதற்கு ஏதுவானது
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கல்குவாரிகளில் 3 ஆயிரம் மில்லியன் லிட்டர் நீர் இருப்பு உள்ளது. ஒரு நாளைக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதம், 100 நாளைக்கு சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானது. அந்த தண்ணீர் குடிநீருக்கு உகந்ததா? என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து நிபுணர்கள் வந்து ஆய்வு செய்து, அந்த நீரை பயன்படுத்தலாம் என்று உறுதி அளித்துள்ளனர்.
அதன்பின்புதான் நாங்கள் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் மக்கள் பயன்படுத்த வழங்கப்படும்.
இதேபோல், போரூர் ஏரியில் இருந்தும் நீரை சுத்திகரித்து வீராணம் ஏரி குழாய் மூலம் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story