குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள அவுரித்திடல் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் போலீஸ் பன்னீர், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் காலிக்குடங்களை தலையில் வைத்துக்கொண்டு குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்காணக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் அம்பலவாணன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயேந்திரன், மகளிர் அமைப்பாளர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைஞாயிறு
அதேபோல் நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் வீரசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தலைஞாயிறு ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்போட்டை போக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட அவை தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி
கீழையூர் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவை தலைவர் மனதுணைநாதன், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள் பேரூர் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருமருகல் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதளாபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story