சார்மடி வனப்பகுதியில் 3-வது வளைவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது; 2 பேர் பலி


சார்மடி வனப்பகுதியில் 3-வது வளைவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது; 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

சார்மடி வனப்பகுதியில் 3-வது வளைவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் பலியானார்கள். டிரைவர், கிளனர் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சார்மடி வனப்பகுதியின் 3-வது வளைவில் நேற்று மாலை ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டு இருந்தது.

அந்த பஸ்சில் டிரைவர், கிளனர் உள்பட 40 பேர் இருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து அறிந்த தர்மசாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2 பேர் பலி

அப்போது பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள். டிரைவர், கிளனர் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தர்மசாலா, மங்களூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெல்தங்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் விபத்தில் பலியான 2 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இதுகுறித்து தர்மசாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story