கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது 6 பேர் படுகாயம்


கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 May 2017 3:45 AM IST (Updated: 17 May 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்ததால் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்குகிறது. இங்குள்ள கடற்கரை சாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் அதிக அளவில் சென்று வருவார்கள்.

கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை தடைசெய்து இருந்தனர். ஆனால் தற்போது இந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் சுற்றுலா வாகனங்கள் கடற்கரை சாலையில் வேகமாக செல்வதுடன் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

கார் புகுந்தது


இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் சுற்றுலா பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் உள்பட 4 சுற்றுலா பயணிகளும், சேலத்தை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பி சென்றனர். கடற்கரை சாலையில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் தான் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story