பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு
பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கோவை
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் செயல்பட்டு வந்த மதுக்கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இதையடுத்து அந்த கடையை பத்ரகாளியம்மன் கோவில் வீதிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது குறித்து சப்–கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
இதற்கிடையில் பொதுமக்களில் சிலர் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் திறக்கப்பட்ட, மதுக்கடைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சப்–கலெக்டர் அலுவலகத்தில் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பாதுகாப்பு வழங்க வேண்டும்
பொள்ளாச்சி நகராட்சி 32, 33, 34, 35 ஆகிய வார்டுகளில் வசித்து வரும் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மது தினசரி வேலை செய்ய தேவையானதாக உள்ளது. தற்போது மது வாங்கவும், குடிக்கவும் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோட்டூர் சுங்கம் செல்வதால் செலவு அதிகமாகிறது. மேலும் விபத்துகளால் உயிர் பலி ஏற்படுகிறது.
தற்போது கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் பின்புறம் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் புதிதாக திறந்து உள்ள மதுக்கடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் மதுக்கடையால் குடியிருப்புவாசிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் கிடையாது. பொதுமக்கள் யாரும் புதிய மதுக்கடைக்கு எதிராக போராடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் தான் போராடி வருகின்றனர். எனவே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மதுக்கடைக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பணம், செல்போன் திருடுபோய் விடுகிறது
மேலும் இது குறித்து பெண்கள் சிலர் கூறியதாவது:–
தற்போது மதுக்கடை அருகில் இருப்பதால் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுகின்றனர். இதே தூரத்தில் இருந்தால் குடித்து விட்டு, அங்கே போதையில் படுத்துக்கொள்கின்றனர். இதனால் சட்டை பாக்கெட்டில் இருக்கும் பணம், செல்போன் திருடுபோய் விடுகிறது. எனவே தற்போது எங்கள் பகுதியில் திறக்கப்பட்டு உள்ள மதுக்கடைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மறியலில் ஈடுபட முயற்சி
இந்த நிலையில் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் வீதியில் அமைக்கப்பட்டு உள்ள மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சிலர் கோட்டூர் ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சப்–கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து அவர்கள் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மதுக்கடையை மூடக் கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story