கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு சூரம்பட்டியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கவுரவ பொதுச்செயலாளர் சி.குப்புசாமி தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பி.காமராஜ் பாண்டியன், முன்னாள் தலைவர் பி.செல்லமுத்து ஆகியோர் பேசினார்கள்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் 100 சதவீத ஆய்வு நடவடிக்கை மற்றும் மிரட்டல்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கூட்டுறவு சங்க பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நடக்கும் முயற்சிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மேசப்பன், பொருளாளர் கே.எம்.சேதுபதி, மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.பழனிச்சாமி, என்.முருகேசன், இணை செயலாளர்கள் பி.சண்முகம், கே.கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story