பிரபல எண்ணெய் நிறுவன வினியோகஸ்தர் வீடு–குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோட்டில் பிரபல எண்ணெய் நிறுவன வினியோகஸ்தர் வீடு மற்றும் குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு
சென்னையை தலைமையிடமாக கொண்டு காளீஸ்வரி ரீபைனரீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நிறுவனம் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் வருமான கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று கூறி நேற்று நிறுவனத்தின் அனைத்து கிளைகள் மற்றும் நிறுவனம் சார்ந்த இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஈரோட்டில் சோதனை
இந்தநிலையில் காளீஸ்வரி ரீபைனரீஸ் நிறுவனத்தின் முக்கிய வினியோகஸ்தர் வீடு மற்றும் குடோன் ஈரோட்டில் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் சென்னை மற்றும் கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பெருந்துறை ரோடு எம்.எல்.ஆர். வீதியில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அதே நேரம் இன்னொரு குழுவினர் சித்தோட்டில் உள்ள குடோனுக்கும் சென்றனர். இந்த குழுவினர் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினார்கள். வீடுகள் மற்றும் குடோனுக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. வீடு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் உள்ளது. எனவே அதே கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிரமம் அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வினியோகஸ்தருக்கு தொடர்பு உடைய வேறு சில அலுவலகங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று மாலைவரை தொடர்ந்து நடந்தது.
முக்கிய ஆவணங்கள்
இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டத்தில் பேசியபோது, ‘குறிப்பிட்ட நிறுவனம் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாதது, முறையான கணக்குகளை சமர்ப்பிக்காதது உள்பட பல தகவல்கள் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அந்த நிறுவனம் சார்ந்த இடங்களில் சோதனை நடந்து உள்ளது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்து உள்ளன. அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்கள்.
ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story