ராமேசுவரம் பகுதியில் சூறாவளிகாற்றுடன் கடல்கொந்தளிப்பு: தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது
ராமேசுவரம் பகுதியில் சூறாவளிகாற்றுடன் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருகிறது. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் நேற்றும் சூறாவளிகாற்று வீசி கடல்கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்தகாற்றால் ராமேசுவரம் – தனுஷ்கோடி சாலையை பல இடங்களில் மணல் மூடியது. கடல்கொந்தளிப்பால் கடல் அலைகள் சீறி எழுந்தன. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளத்தின் சுவரில் அலைகள் ஆக்ரோஷமாக மோதி 10 அடி உயரத்திற்கு சீறி எழுகின்றன. இதை ஆபத்தான நிலையில் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மிதவேகத்தில் ரெயில்கள் கடல்சீற்றத்தால் அரிச்சல்முனை கடற்கரை அருகே புதிய சாலையின் தடுப்புச்சுவரின் கற்கள் லேசாக சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தப்புச்சுவர் மேலும் சேதமாகாமல் தடுத்தனர். வெப்பம் தணிந்தது இதே போல் பாம்பன் பகுதியிலும் சூறாவளி காற்றுவீசி வருகிறது. இதன்காரணமாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்ற ரெயில்களும், ராமேசுவரம் வந்த ரெயில்களும் மித வேகத்திலேயே ரெயில் பாலத்தில் இயக்கப்பட்டன. வானிலை மையம் அனல்காற்று வீசும் என்று அறிவித்து இருந்த நிலையில் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் நிலைமைமாறி கடல்காற்று காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது.
Related Tags :
Next Story