உச்சிப்புளி அருகே நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீச்சு


உச்சிப்புளி அருகே நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 18 May 2017 3:30 AM IST (Updated: 17 May 2017 11:57 PM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீச்சு பெண் படுகாயம்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் உச்சிப்புளி அருகே உள்ள சாத்தக்கோன்வலசை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. முன்சீட்டில் அமர்ந்து பயணம் செய்த ராமேசுவரத்தை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மனைவி அற்புதமேரி(43) படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பஸ் டிரைவர் சத்தீசுவரன், கண்டக்டர் அரவிந்தபிரசாத் ஆகியோர் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த அற்புதமேரிக்கு மண்டபம் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story