மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 May 2017 3:15 AM IST (Updated: 18 May 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே தென்பழனி காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இங்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். மயிலாடும்பாறைக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அந்த பகுதியில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று தென்பழனி காலனியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களுடன் ஒன்றிய ஆணையாளர் சுருளிவேல் தலைமையில் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story