தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக ரவி பதவி ஏற்றார்
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக எம்.ரவி நியமிக்கப்பட்டார்.
சென்னை
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக எம்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை பதவி ஏற்றார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
1991-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக ரவி தேர்வு பெற்றார். தமிழக போலீஸ் துறையில் ஸ்ரீவைகுண்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கினார்.
2 முறை ஜனாதிபதி விருது பெற்றுள்ள இவர், தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது, கொழுந்துவிட்டு எரிந்த சாதி கலவரத்தை அடக்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயத்தில் பட்ட மேற்படிப்பும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story