ஓசூரில் மழை வேண்டி துக்காலம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
ஓசூர் ராமநாயக்கன் ஏரியின் நடுப்பகுதியில் துக்காலம்மன் என்ற காவேரியம்மன் கோவில் உள்ளது. துக்காலம்மனுக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் மழை வளம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம்.
ஓசூர்,
ஓசூர் ராமநாயக்கன் ஏரியின் நடுப்பகுதியில் துக்காலம்மன் என்ற காவேரியம்மன் கோவில் உள்ளது. துக்காலம்மனுக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் மழை வளம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகம். இந்தநிலையில் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் தலைமையில் துக்காலம்மனுக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது.
பின்னர் கலச நீர் ஊற்றி, துக்காலம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா கணேஷ், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் முத்தப்பா, முன்னாள் சென்னத்தூர் ஊராட்சி தலைவர் ராமாஞ்சி ரெட்டி, தொழிலதிபர் பால் முனியப்பா, லோகநாதன், சின்னப்பா உள்பட பலர் கலந்து கொண்டனா.
பூஜையின்போது, ஓசூர் பகுதியில் நல்ல மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்ப வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், மற்றும் நாடும் செழிப்படைய வேண்டும், என்று பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.