மணமகன் பிடிக்காததால் புதுப்பெண் தோழியுடன் மும்பைக்கு ஓட்டம் போலீசார் விசாரணை


மணமகன் பிடிக்காததால் புதுப்பெண் தோழியுடன் மும்பைக்கு ஓட்டம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 May 2017 3:30 AM IST (Updated: 18 May 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடியில் மணமகன் பிடிக்காததால் புதுப்பெண் தோழியுடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி,

எடப்பாடியில் உள்ள ஒரு தையல் பயிற்சி மையத்தில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்கள் 2 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி பயிற்சி மையத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த 2 பேரில் ஒருவர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் என்பதால், அவரின் பெற்றோர் எடப்பாடி போலீசில் புகார் தெரிவித்தனர்.

மும்பைக்கு தோழியுடன் ஓட்டம்


இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுப்பெண் தனக்கு பார்த்துள்ள மணமகன் பிடிக்காமல் மும்பையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு தோழியுடன் ரெயிலில் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் மும்பையில் இருந்து அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story