தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் உருக்காலை ஊழியர்கள் குடும்பத்துடன் ஊர்வலம்
தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் உருக்காலை ஊழியர்கள் குடும்பத்துடன் ஊர்வலம் நடத்தினர்.
சேலம்,
நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்று ஆகும். சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, அதை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கடந்த 3 மாதத்திற்கும் மேலாக உருக்காலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். உருக்காலை ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக தனிஅலுவலரை நியமிப்பதற்கான டெண்டர் திறப்பு நேற்று நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும், ஆலையின் செயல்பாட்டை முடக்கும் செயல்களை கைவிட வலியுறுத்தியும் சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் உருக்காலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தேவராஜன், உதயகுமார், ஆக்ஸ்போர்டு ராமநாதன், வடமலை, பா.ம.க. தொழிற்சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், லட்சுமணன், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன், உருக்காலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஊர்வலம் கோட்டை மைதானத்தில் புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக சேலம் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story