கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணலில் 2,589 பேர் பங்கேற்பு
கால் நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 7 நாட்கள் நடந்த நேர்காணலில் 2,589 பேர் பங்கேற்றனர்.
கரூர்,
கால் நடை துறையில், கால் நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர் காணல் கடந்த 10-ந்தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. அதே போன்று கரூர் மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான நேர்காணல் 10-ந்தேதி கரூரை அடுத்து புலியூரில் உள்ள எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கியது. இந்த நேர்காணல் பணி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் நடந்த இந்த நேர்காணலில் பங்கேற்பதற்காக ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காலையில் இருந்தே காத்து நின்றனர்.
2,589 பேர் பங்கேற்பு
இது குறித்து கால் நடை பராமரிப்பு துறை கரூர் மண்டல இணை இயக்குனர் கதிர்வேலிடம் கேட்டபோது, இந்த பணிக்கு கரூர் மாவட்டத்தில் 3,892 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 7 நாட்களாக (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) நடந்த நேர்காணலில் 2,589 பேர் பங்கேற்று உள்ளனர் என்று கூறினார்.

Related Tags :
Next Story