அழககவுண்டன்குளம்-நாதிப்பட்டிகுட்டைக்குளம் தூர்வாரும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


அழககவுண்டன்குளம்-நாதிப்பட்டிகுட்டைக்குளம் தூர்வாரும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

அழக கவுண்டன் குளம், நாதிப்பட்டிகுட்டைக்குளம் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் நாகனூரில் குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் சொந்த நிதியில் இருந்து 10.65 ஏக்கர் பரப்பளவு உள்ள சுமார் 100 ஏக்கர் பாசன வசதி உடைய அழககவுண்டன் குளம் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தூர் வாரும் பணியை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கம்பத்தாம்பாறையை சேர்ந்த தொண்டர் கோபால் என்பவர் மகனுக்கு கதிரவன் என்று பெயர் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, சின்னசாமி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூர்வாரும் பணி

இதே போன்று கரூர் மாவட்டம் கொசூர் நாதிப்பட்டி குட்டைக்குளம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த குளம் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது குளம் தூர்ந்து போனது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தில் இருந்த மண்ணை அள்ளி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.


Related Tags :
Next Story