காவேரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்
காவேரி நகரில் உள்ள டாஸ்மாக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நார்த்தாமலை,
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செங்கோடன், மாநிலக்குழு உறுப்பினர் தர்மராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.
போராட்டம் நடத்த முடிவு
கூட்டத்தில், காவேரி நகர் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் இன்னும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இதே நிலை நீடித்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு
மேலும், மேலூர் விளக்கு சாலை பஸ் நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் விஜயரங்கன், அழகர்சாமி, சோமையா, மீராமைதீன், நாகராஜன், பழனியப்பன், சின்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story