வாலிபரை தாக்கிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது வழக்கு


வாலிபரை தாக்கிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது வழக்கு

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தாமரைப்பூண்டி-மருங்கூர் சாலை வழியாக நயினார்குடிக்காட்டை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (வயது 27) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தனியார் சிமெண்டு ஆலையை சேர்ந்த லாரி எதிர்பாராதவிதமாக அலெக்ஸ்பாண்டியன் மீது மோதுவது போல் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் அந்த லாரியை நிறுத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்து அலெக்ஸ்பாண்டியனின் உறவினர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஞானமூர்த்தி தரப்புக்கும், அலெக்ஸ்பாண்டியன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது. இதில் ஞானமூர்த்தி, அலெக்ஸ்பாண்டியனை தாக்கினார். இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் அலெக்ஸ்பாண்டியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story