பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்
x
தினத்தந்தி 17 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-18T03:33:32+05:30)

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சோனல்சந்திரா, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணிமாறுதல் பெற்றார். இதையடுத்து திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனராக(சட்டம் மற்றும் ஒழுங்கு) பணியாற்றி வந்த திஷா மித்தல், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திஷா மித்தல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்று கொண்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற திஷா மித்தலுக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story