ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் உள்ள ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுக்க அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண் எடுக்க அனுமதி கேட்டு 1,392 பேர் கொடுத்திருந்த மனுவை ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், சிறப்பு முகாமை பயன்படுத்தி ஏரி, குளங்களை தூர்வாருவதோடு, விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான வண்டல் மண்களையும், களி மண்களையும் இலவசமாக எடுத்து பயன் அடைய வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், வருவாய் கோட்டாட்சியர் மா.கோவிந்தராஜ், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story