ராஜ்தாக்கரேயுடன் பாபா ராம்தேவ் சந்திப்பு


ராஜ்தாக்கரேயுடன் பாபா ராம்தேவ் சந்திப்பு
x
தினத்தந்தி 18 May 2017 3:59 AM IST (Updated: 18 May 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

மும்பை,

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரையிலும் நீடித்தது. இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் ராஜ்தாக்கரேயை மரியாதை நிமித்தமாக பாபா ராம்தேவ் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்தாக்கரே கூறுகையில், ‘பாபா ராம்தேவ் உடனான சந்திப்பு சிறப்பானது. இந்து பாரம்பரியமான யோகா மற்றும் ஆயுர்வேதத்தை உலகளவில் அறிய செய்த சிறந்த மனிதர்’ என்றார். பா.ஜனதா ஆதரவு நிலைப்பாடுடைய பாபா ராம்தேவ், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story