ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் செய்யாறு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு,

குடிநீர் பிரச்சினை
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி எல்லையையொட்டி பைங்கினர் என்ற கிராமம் அமைந்துள்ளது. நகரை ஒட்டி இந்த ஊராட்சி உள்ளதால் இங்கு அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்காக ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் எடுத்து வினியோகித்திட கடந்த 25 வருடங்களுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. அதன்படி பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
பல வருடங்களுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டதால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட குழாய் உடைப்பை ஒரு மாதத்துக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆரணி செல்லும் சாலையில் பைங்கினர் கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story