டிப்பர் லாரி கவிழ்ந்து நடந்து சென்ற பெண் சாவு பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்
ஓசூர் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து சாலையோரம் நடந்து சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை புக்கசாகரத்தை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கெம்பம்மா (வயது 45). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கெம்பம்மா நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு வேலை செய்துவிட்டு மதியம் உணவு இடைவேளையின்போது சாப்பிடுவதற்காக வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
பெண் பரிதாப சாவு
அந்த டிப்பர் லாரி புக்கசாகரம் தரைப்பாலம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் அந்த லாரி சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த கெம்பம்மா மீது கவிழ்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெம்பம்மாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கெம்பம்மாவின் உடலை நடு சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், தாசில்தார் பெருமாள் மற்றும் பேரிகை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது, இந்த பகுதி வழியாக செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்கிறது. மேலும் அதிக வேகமாக செல்வதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் கெம்பம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story