ஊருக்குள் வரும் குழாயை அடைத்ததை கண்டித்து சாலைமறியல் போராட்டம்
ஊருக்குள் வரும் குடிநீர் குழாயை அடைத்ததை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது டி.ராமநாதபுரம். இந்த ஊரில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக குடிநீர் முற்றிலும் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும், அதிகாரிகள் அலட்சியம் செய்ததாகவும், மேலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் நேற்று டி.ராமநாதபுரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன், டி.ராமநாதபுரம்-எம்.கல்லுப்பட்டி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
தனி அதிகாரம்
இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- ஏற்கனவே இருக்கிற ஆழ்துளை கிணறுகளை, மீண்டும் தூர்வாரினால் இந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைத்துவிடும், பற்றாக்குறையும் ஏற்படாது. மேலும் கூட்டு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்த பகுதிகளில் உள்ள சிலர் தங்கள் தேவைக்கு குடிநீரை எடுத்துக் கொண்டு, ஊருக்குள் வரும் குடிநீர்குழாயை அடைத்துக்கொள்கின்றனர்.
இதனால் தனி அதிகாரம் படைத்த சிலரின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்டிப்பதில்லை. இதை கண்டித்தும், அந்த முறைகேடுகளை அதிகாரிகள் தடுத்து, எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்ககோரி நாங்கள் சாலைமறியல் போராட்டம் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தகவலறிந்து வந்த டி.ராமநாதபுரம் போலீசார், ஊராட்சி செயலர் வீரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story