விழுப்புரம் செயல்வீரர்கள் கூட்டத்திற்கான பந்தல்கால் நடும் பணி எம்.பி. தொடங்கி வைத்தார்
அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நடைபெறும் விழுப்புரம் செயல்வீரர்கள் கூட்டத்திற்கான பந்தல்கால் நடும் பணியை லட்சுமணன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிக்காக பந்தல்கால் நடும் விழா விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் லட்சுமணன் எம்.பி. தலைமை தாங்கி பந்தல்கால் நடும் பணியை தொடங்கி வைத்து மேடை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் மோகன், ராஜேந்திரன் எம்.பி., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், இணை செயலாளர் செந்தில்குமார், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராம.சரவணன், மயிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அர்ஜூணன், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன், தொழில் அதிபர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் சரவணன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் புஷ்பலதா கோதண்டராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story