அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தீவிர ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை,
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான விதிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மனைப்பிரிவு உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மூலம் விதிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி 20.10.2016 வரை வரன்முறை படுத்தப்படாத மனைப்பிரிவுகள் இந்த விதிமுறைகளின் படி வரன் முறைப்படுத்தப்படும்.
ஆவணங்கள்
முதல் கட்டமாக அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்திட அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ள ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நகராட்சிகளுக்கு நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளுக்கு பேரூராட்சி செயல் அதிகாரிகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை கண்டறிந்து அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களிடம் மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க தேவையான ஆவணங்களை பெற வேண்டும்.
அனுமதி வழங்க வேண்டும்
பின்னர் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஒவ்வொரு மனைப்பிரிவுகளையும் வகைப்படுத்தி தயார் செய்து அனுமதி அளிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அல்லது பவர் பத்திரம் ஆகிய ஆவணங்கள் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்கு தகுதியான ஆவணமாக கருதப்பட மாட்டாது.
மேலும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து உள்ள எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மாட்டாது. மேலும் நமது மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை அரசு வகுத்து உள்ள விதிமுறைகளின் படி அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story