மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் மழை: மேற்கூரை பறந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிய குழந்தை தூக்கி வீசப்பட்டது + "||" + Hurricane winds: A child lying in the crib was thrown out of the roof

சூறாவளி காற்றுடன் மழை: மேற்கூரை பறந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிய குழந்தை தூக்கி வீசப்பட்டது

சூறாவளி காற்றுடன் மழை: மேற்கூரை பறந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிய குழந்தை தூக்கி வீசப்பட்டது
நெல்லையில், பலத்த சூறாவளி காற்றுடன் மழை: வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிய குழந்தை தூக்கி வீசப்பட்டது
நெல்லை,

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குடி தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்து நெல்லையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. கோடை காலத்தில் பெய்த இந்த திடீர் மழையால் நேற்று மாலை நேரம் இதமாக இருந்தது.

நெல்லை கருப்பந்துறை விளாகம் பகுதியில் சூறைக்காற்று வீசியதில் 11 வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் சண்முகத்தாய் என்பவரின் 6 மாத குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தது. பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்ததில் தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை, தொட்டிலுடன் பக்கத்து தெருவிற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.