அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு போனது.
ஆவடி
அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு போனது.
வீட்டின் பூட்டு உடைப்புஅம்பத்தூர் சந்திரசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் சலீம்(வயது 52). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தார்.
நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, 2 மகள்களுடன் சென்னை பெரம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
30 பவுன் நகை திருட்டுவீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் தரையில் சிதறிக்கிடந்தன. அதில் வைத்து இருந்த 30 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
சலீம், குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இது குறித்து அம்பத்தூர் போலீசில் சலீம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.