விவசாயிகள் தற்கொலையை பிரதமர் கவனிக்க வேண்டும்
விவசாயிகள் தற்கொலையை பிரதமர் கவனிக்க வேண்டும் என்று தேவேகவுடா தனது பிறந்தநாளில் கூறினார்.
பெங்களூரு
விவசாயிகள் தற்கொலையை பிரதமர் கவனிக்க வேண்டும் என்று தேவேகவுடா தனது பிறந்தநாளில் கூறினார். அவருக்கு ஜனாதிபதி உள்பட தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள்
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று 85-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி தனது குடும்பத்தினருடன் திருப்பதி திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் பெங்களூரு திரும்பினார்.
அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, முதல்-மந்திரி சித்தராமையா உள்பட பல முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினர். பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவருடைய வீட்டில் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இரட்டிப்பு மகிழ்ச்சி
கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் எனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்று நான் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த ஆண்டு இன்றும்(அதாவது நேற்று) திருப்பதி திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் பிறந்த தினம் வியாழக்கிழமை. அதே கிழமையான இன்று(நேற்று) வியாழனில் எனது பிறந்தநாள் வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
40 ஆண்டுகளாக எனது பிறந்த நாளில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். நாட்டிலும், கர்நாடகத்திலும் நிலைமை சரியில்லை. இதை சரிசெய்யுமாறு இறைவனிடம் வேண்டி கொண்டேன். மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். குமாரசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதல்-மந்திரி ஆக வேண்டும்.
பிரதமர் கவனிக்க வேண்டும்
எனது பிறந்த நாளில் கூட்டு திருமணம் நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் மக்கள் இந்த அளவுக்கு ஆதரவு அளிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது. இதை பிரதமர் கவனிக்க வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story