கர்நாடகத்தில், வறட்சியை ஆய்வு செய்ய எடியூரப்பா சுற்றுப்பயணம்
கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய எடியூரப்பா தனது சுற்றுப் பயணத்தை துமகூருவில் தொடங்கினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய எடியூரப்பா தனது சுற்றுப் பயணத்தை துமகூருவில் தொடங்கினார். இதில் ஈசுவரப்பா உள்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
எடியூரப்பா சுற்றுப்பயணம்
கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்ய 18-ந் தேதி(அதாவது நேற்று) முதல் 40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். அதன்படி எடியூரப்பா நேற்று காலை துமகூருவுக்கு சென்று, சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பிறகு அவர் திட்டமிட்டப்படி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக துமகூருவில் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவக்குமார சுவாமி நலமாக உள்ளார். சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் நான் ஆசி பெற்று வந்துள்ளேன். ஊடகங்கள் தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. எடியூரப்பா அணி, ஈசுவரப்பா அணி என்று சொல்ல வேண்டாம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். இந்த சுற்றுப்பயணத்தில் ஈசுவரப்பாவும் கலந்து கொண்டுள்ளார்.
5 ஆயிரம் கிலோ மீட்டர்
கர்நாடக அரசின் தோல்விகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள், வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவரங்களை சேகரிப்போம். 40 நாட்கள் இந்த சுற்றுப்பயணத்தில் ஈடுபடுகிறோம். தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம்.
மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு ஒரு அறிக்கையை தயார் செய்து பிரதமரிடம் வழங்குவோம். கவர்னருக்கும் அறிக்கை கொடுப்போம். எங்கள் கட்சியில் கோஷ்டி அரசியல் இல்லை. கட்சியின் அனைத்து தலைவர்களும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
மத்திய மந்திரி அனந்தகுமார்
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் கூறியதாவது:-
சிவக்குமார சுவாமி நலமாக உள்ளார். அவர் விரைவாக குணம் அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். விரைவில் பிரதமர் நேரில் வந்து சுவாமியை சந்திப்பார். இந்த வறட்சி சுற்றுப்பயணத்தில் நான் உள்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கிறோம். எடியூரப்பா தலைமையில் இந்த சுற்றுப்பயணம் இன்று(நேற்று) முதல் தொடங்கியுள்ளது.
இதில் ஈசுவரப்பாவும் கலந்து கொண்டுள்ளார். நாங்கள் பஞ்ச பாண்டவர்களை போன்றவர்கள். ஒற்றுமையாக இருக்கிறோம். பொதுமக்களை சந்தித்து விவரங்களை சேகரிப்போம். பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் அந்த கட்சி தோல்வியை தழுவும்.
இவ்வாறு அனந்தகுமார் கூறினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய மந்திரி சதானந்தகவுடா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story