வீட்டுமனைகளை 6 மாதத்துக்குள் வரன்முறைப்படுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனைகளை 6 மாதத்துக்குள் வரன் முறைப்படுத்த வேண்டும் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனைகளை சீர்படுத்தி, வரன்முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி போன்றவற்றை சரியாக அமைப்பதில்லை. இதை தவிர்க்க கிரயம் பெற்றவர்களும் மற்றும் மனைப்பரிவு உரிமையாளர்களும் பயன்பெறும் வகையிலும் தமிழக அரசால் வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே அனுமதி இல்லாத வீட்டு மனைகளை வைத்திருக்கும் மக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுக வேண்டும். மேலும் 6 மாத காலத்துக்குள் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்த வேண்டும்.
நடவடிக்கை
வரன்முறைப்படுத்தாத வீட்டு மனைகளுக்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு ஆகியவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரன்முறைப்படுத்தாத வீட்டு மனைகளை விற்கவோ, வாங்கவோ பதிவுத்துறை மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய இயலாது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, நகர் ஊரகமைப்பு துணை இயக்குனர் சங்கரமூர்த்தி, நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story