மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 May 2017 3:45 AM IST (Updated: 21 May 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் மரியஜான். இவருடைய மகன் ஜீசஸ் வெல்பர் (வயது 21). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் சுவின்ராஜ் (18), பாலிடெக்னிக் மாணவர்.

நேற்று மதியம் ஜீசஸ் வெல்பர், நண்பர் சுவின்ராஜனுடன் கோடிமுனையில் இருந்து குளச்சல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை ஜீசஸ் வெல்பர் ஓட்டினார்.

 குளச்சல் துறைமுக சாலை வழியாக சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஜீசஸ் வெல்பரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக நடந்து வந்த கருங்கல் சுண்டவிளையை சேர்ந்த சூசைநாயகம் (வயது 59) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீசஸ் வெல்பர், சுவின்ராஜ், சூசைநாயகம் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

பலி


உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீசஸ் வெல்பர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் சுவின்ராஜ் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சூசைநாயகம் குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இந்த விபத்து தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story