ஜி.எஸ்.டி. வரி அதிகமாக விதித்ததற்கு எதிர்ப்பு: 500 ஓட்டல்கள் அடைப்பு ‘ஆன்–லைன்’ விற்பனை அனுமதியை கண்டித்து மருந்துகடைகளும் அடைக்கப்பட்டன


ஜி.எஸ்.டி. வரி அதிகமாக விதித்ததற்கு எதிர்ப்பு: 500 ஓட்டல்கள் அடைப்பு ‘ஆன்–லைன்’ விற்பனை அனுமதியை கண்டித்து மருந்துகடைகளும் அடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-31T00:06:12+05:30)

ஜி.எஸ்.டி. வரி அதிகமாக விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று 500 ஓட்டகள் அடைக்கப்பட்டன. மேலும், ‘ஆன்–லைன்’ விற்பனை அனுமதியை கண்டித்து மருந்துக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கடலூர்,

அகில இந்திய அளவில் ஆன்–லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல், விற்பனை விவரங்களை பதிவு செய்ய இ–போர்ட்டல் எனும் எலக்ட்ரானிக் முறையை ஜூலை மாதம் முதல் அறிமுகம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளை அடைத்து மருந்து வணிகர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கதிர்வேல் கூறுகையில், ஆன்–லைன் வியாபாரம் மருந்து விற்பனைக்கு ஏற்புடையதல்ல. எனவே இதனை எதிர்த்து மருந்துக்கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினோம். மாவட்டம் முழுவதும் உள்ள 1,100 மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததன. இது எங்களுக்கு கிடைத்த முழு வெற்றி. என்றார்.


Next Story