மாதவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் சாவு


மாதவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 30 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-31T02:43:59+05:30)

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் ஜங்சன் மாதவரம்–மணலி 200 அடி சாலையில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது.

செங்குன்றம்,

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் அந்த மானுக்கு காலில் காயம் ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை மீட்டு மாதவரம் பால்பண்ணையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே மான் விபத்துக்குள்ளானது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் மான் பரிதாபமாக இறந்துவிட்டது. இதையடுத்து வனத்துறையினர் வந்து இறந்துபோன மானின் உடலை மீட்டு சென்றனர்.


Related Tags :
Next Story