சேலத்தில் மாட்டு இறைச்சி வியாபாரிகள்–எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் மாட்டு இறைச்சி வியாபாரிகள்–எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 11:47 PM GMT (Updated: 2017-05-31T05:17:42+05:30)

சேலம் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகம்மது பயாஸ், சேலம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்சர் அலி வரவேற்று பேசினார்.

காளைகள், பசு, கன்று, எருமைகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மண்டல தலைவர் நாவரசன், மண்ணின் மைந்தவர்கள் அமைப்பின் தலைவர் சார்ப் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் மாநகரில் மாட்டு இறைச்சி அதிக அளவு விற்பனை செய்யும் பகுதியான முகமது புறா பகுதியில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டு மத்திய அரசுக்கு வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.Next Story