இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்


இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்
x
தினத்தந்தி 31 May 2017 5:56 AM GMT (Updated: 2017-05-31T11:26:05+05:30)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ என்ற அழைக்கப்படுகிறது.

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ என்ற அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஆய்வு மையத்தில் டெக்னீசியன், டிராப்ட்ஸ் மேன், சயின்டிபிக் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

டெக்னீசியன் பணியிடங்களில் எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், லேப் அசிஸ்டன்ட் கெமிக்கல், மெஷினிஸ்ட், பிளம்பர், எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன.

இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 8, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.டி.சி., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10-6-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nrsc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். 

Next Story