வினா வங்கி


வினா வங்கி
x
தினத்தந்தி 31 May 2017 7:43 AM GMT (Updated: 31 May 2017 7:43 AM GMT)

1. இந்திய கடற்படை, சமீபத்தில் ஒரு துறைமுகத்தில் நீருக்கு அடியில் இருந்து இயங்கும் துறைமுக பாதுகாப்பு- கண்காணிப்பு தொழில் நுட்பத்தை நிறுவியது.

1. இந்திய கடற்படை, சமீபத்தில் ஒரு துறைமுகத்தில் நீருக்கு அடியில் இருந்து இயங்கும் துறைமுக பாதுகாப்பு- கண்காணிப்பு தொழில்நுட்பத்தை நிறுவியது. அது எந்த துறைமுகம்?

2. வரும் ஜூலையில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டி எந்த நாட்டில் நடக்க உள்ளது?

3. கிராமப்புறத்தினருக்கு டிஜிட்டல் கல்வி வழங்குவதற்காக மத்திய அமைச்சகம் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர் என்ன?

4. எந்த விலங்கின் உடலில் எபோலா வைரஸ்களை ஒடுக்கும் தன்மை கொண்ட நோய் எதிர்பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்?

5. இந்தியாவில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான முதல் பயிற்சி மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

6. 2016-ம் ஆண்டுக்கான டாக்டர் பி.சி.ராய் தேசிய விருதுக்கு தேர்வு பெற்ற அறுவைச்சிகிச்சை நிபுணர் யார்?

7. ஹைத்தி தீவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொழில்அதிபர் யார்?

8. மாநில அளவிலான டி20 போட்டியில் 300 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யார்?

9. சைபர் குற்ற பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக எந்த இந்திய நிறுவனம் தனிக்குழு உருவாக்கி அறிவித்தது?

10. உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நாடு என்ற பெருமையை ஜெர்மனியிடம் இருந்து தட்டிப்பறித்து முன்னிலை வகிக்கும் நாடு எது?

11. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் டிரைவராகவும், பாதுகாப்பாளராகவும் இருந்த ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் யார்?

12. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை பட்டியல் - 2017-ல் இந்தியா வகிக்கும் இடம்?

13. பூமி அளவிலான கோள் ஒன்றில் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா அறிவித்தது. அது எந்த கோள்?

14. பார்வையற்றோர் டி20 உலக கோப்பை-2017ஐ வென்ற அணி எது?

15. 2018-ல் விண்வெளிக்குச் செல்ல உள்ள இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி யார்?

16. எந்த மாநிலத்தில் ஆதார் கார்டிற்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது?

17. சோமாலியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

18. செபியின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ளவர் யார்?

19. பூரி கடற்கரையில் கின்னஸ் உலக சாதனை படைத்த மணல் சிற்பி யார்?

20. தேசிய பெண்கள் பாராளுமன்றம் எந்த மாநிலத்தில் நடந்தது?

விடைகள் :

1. மும்பை, 2. இந்தியா, 3. பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்சார்தா அபியான் (PMGDISHA), 4. நாய், 5. காந்திநகர், குஜராத், 6. ரகுராம், 7. ஜோவெனெல் மோயிஸ், 8.மோகித் அகல்வாட் (டெல்லி), 9. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.), 10. சீனா, 11. கலோனியல் நிஜாமுத்தின், 12. 43, 13. பிராக் சிமா-பி, 14. இந்தியா, 15. ஷாவ்னாபாண்ட்யா, 16. குஜராத், 17. முகமத் அப்துல்லாகி பர்மாஜோ, 18. அஜய் தியாகி, 19. சுதர்சன் பட்நாயக், 20. ஆந்திர பிரதேசம். 

Next Story